rajinikanth vettaiyan

Vettaiyan Rajinikanth : எதிர்பார்ப்பு வீணாயிட்டே!.. வேட்டையன் ட்ரைலரால் அதிருப்தியில் ரசிகர்கள்!. இதுதான் காரணம்!.

News Tamil Cinema News

ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருந்து வருவதை பார்க்க முடியும். அப்படியாக ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

ஜெய்பீம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அடுத்து அதே போலவே ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். பொதுவாக ரஜினி திரைப்படங்கள் என்றாலே சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும் திரைப்படங்களாகதான் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் வேட்டையன் திரைப்படத்தைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருந்தது. ஏனெனில் இந்த திரைப்படத்தை எடுத்தவர் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தா. செ ஞானவேல். இவரை பொறுத்தவரை சமூக விழிப்புணர்வு தொடர்பான திரைப்படங்களை எடுக்க கூடியவர்.

அவரது திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கும். எனவே பா.ரஞ்சித்தின் திரைப்படம் போலவே ஒரு ஆக்ஷன் கலந்த அரசியல் திரைப்படமாக வேட்டையன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் நேற்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அந்த டீசரை பார்த்த வரையில் கிட்டத்தட்ட ஜெயிலர் திரைப்படம் போலவே இந்த படத்தில் ஒரு ஆக்ஷன் போலீசாகதான் ரஜினிகாந்த் இருப்பதாக தெரிகிறது.

ஜெய் பீம் திரைப்படத்தில் காவலர்களின் வன்முறைக்கு எதிராக பேசிய ஞானவேல் இந்த திரைப்படத்தில் போலீசாக இருக்கும் ரஜினி செய்யும் வன்முறைகளை ஒரு ஆக்ஷன் காட்சியாக காண்பிப்பது முரணான விஷயமாக இருக்கிறது.  எனவே ஜெய் பீம் திரைப்படம் போன்ற ஒரு சமூக நீதியை பேசக்கூடிய திரைப்படமாக வேட்டையன் இருக்காது என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.