Latest News
நம்ப வைத்து ஏமாற்றிய கே.பாலச்சந்தர்.. வருத்தத்தில் நடிகர் எடுத்த முடிவு.. இப்படியா பழி வாங்குறது?.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பெரும் நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த நிறைய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் தொடர்ந்து பிறகு பட வாய்ப்புகளை பெற்ற ஸ்ரீகாந்த் சினிமாவை விட்டு விலகினார். அதற்கு பிறகும் நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகும் அவ்வளவாக அவருக்கு வரவேற்பு பெற்று தரவில்லை.
இப்பொழுது பேட்டிகளில் பேசிய ஸ்ரீ காந்த் இதுக்குறித்து கூறும் பொழுதே நண்பன் திரைப்படத்தில் நடித்த பிறகு கூட ஏன் மக்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை. மக்களின் மனதை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
நண்பன் பட வெற்றி:
நண்பனின் வெற்றிக்கு பிறகு எனக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை என்று மனம் நொந்து பேசி இருந்தார் ஸ்ரீகாந்த்.
எங்களுக்குள் ஆயிரம் வழிகள் இருக்கிறது. ஆனால் வெளியில் சொல்வதில்லை என்று கூறிய ஸ்ரீகாந்த், கே பாலச்சந்தர் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று கே.பாலச்சந்தரிடம் நான் சென்ற பொழுது அவர் இயக்கி வந்த சீரியலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதில் நடித்து வந்தேன்.
ஸ்ரீகாந்தின் கோரிக்கை:
அதற்கு பிறகு எனக்கு அந்த சீரியலில் நடிக்க பிடிக்கவில்லை எனவே நான் வெளிநாட்டுக்கு போறேன். எனக்கு பிரேம் அடித்து விடுங்கள் என்று பாலச்சந்தரிடம் கூறினேன்.
பிரேம் அடித்து விடுங்கள் என்று கூறினால் அந்த நாடகத்தில் இறந்து விட்டதாக அந்த கதாபாத்திரத்தை முடித்து விடுவார்கள். முதலில் இதற்கு பாலச்சந்தர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் வெளிநாட்டுக்கு செல்கிறேன் என்பதால் சரி சினிமாவை விட்டு வேற ஏதாவது நல்ல தொழிலுக்கு போ என்று கூறி என்னை அனுப்பி வைத்தார்.
ஆனால் அதற்குப் பிறகும் நான் திரைப்படங்களில்தான் நடித்தேன். இதனால் பாலச்சந்தருக்கு என் மீது கோபம் இருந்தது. அதற்கு பிறகு நான் நடிக்கும் ஒரு திரைப்படத்தை கே பாலசந்தரின் கவிதாலயா பிக்சர்ஸ் தயாரிப்பதற்கான வாய்ப்பு வந்தது.
நான் பாலச்சந்தர் என்னுடைய திரைப்படத்தை தயாரிப்பதை ஒப்புக்கொள்ளவில்லை ஏனெனில் நாடகத்தில் நடித்து கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்கு ஒன்றரை வருடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கூறி என்னை ஏமாற்றி வந்தார் பாலச்சந்தர் அதனால் அவருடைய படத்தில் நடிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.