கடைசி வரை ரஜினியை திருத்த பார்த்தேன்… ஆனா அதை மக்கள் ஏத்துக்கிட்டாங்க!. பாலச்சந்தர் பகிர்ந்த உண்மை!.

rajinikanth balachander

Actor Rajinikanth: தமிழில் அதிகமாக மார்க்கெட் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது இப்போது வரை குறையவில்லை என்றே கூறலாம்.

ரஜினிகாந்தை நடிகர் ஆக்கியதில் இயக்குனர் கே. பாலச்சந்தருக்கும் முக்கிய பங்குண்டு. கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் நிறைய வரவேற்பை ஏற்படுத்தும் படங்களை இயக்கியுள்ளார் கே. பாலச்சந்தர்.

ஆனால் கே.பாலச்சந்தரை பொறுத்தவரை அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர். கமல்ஹாசன் நடிப்பையே வெகுவாக விமர்சிக்க கூடியவர் பாலச்சந்தர். இந்த நிலையில் ரஜினிகாந்த் பாலச்சந்தரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தப்போது அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியில்லாமல் இருந்ததை பார்த்தார் பாலச்சந்தர்.

rajinikanth
rajinikanth

ஆனால் நடிப்பை பொறுத்தவரை நல்லப்படியாகதான் நடித்தார் என்றாலும் ஒரு நடிகருக்கு வசன உச்சரிப்பும் முக்கியமான விஷயமாகும். இதனால் ரஜினிகாந்திற்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் பலமுறை அவரிடம் தொடர்ந்து வசன உச்சரிப்பை சரி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால் காலப்போக்கில் அதையே ரஜினிகாந்தின் ஸ்டைலாக மக்கள் ஏற்றுக்கொள்ள பாலச்சந்தருக்கு வியப்பாகி போனது. ஒரு நடிகன் நன்றாக நடிக்கிறான் என்றால் வேறு எதையும் மக்கள் கண்டுக்கொள்வதில்லை என்பதை அப்போது பாலச்சந்தர் புரிந்துக்கொண்டார்.