Connect with us

இதுவரை பொங்கலின்போது மோதிக்கொண்ட தல தளபதி படங்கள் – எந்த படம் ஹிட்?

Cinema History

இதுவரை பொங்கலின்போது மோதிக்கொண்ட தல தளபதி படங்கள் – எந்த படம் ஹிட்?

Social Media Bar

வருகிற பொங்கல் அன்று விஜய்யின் வாரிசும், அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவது என்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல.

ஏனெனில் ஏற்கனவே பலமுறை இவர்களது திரைப்படங்கள் தமிழில் ஒன்றாக வெளியாகியுள்ளன. ஆனால் இதே மாதிரி பொங்கலில் வெளியாவது என்பது இதற்கு முன்பு நான்கு முறை நடந்துள்ளது.

முதன் முதலாக தல தளபதி திரைப்படங்கள் ஒன்றாக பொங்கலுக்கு வெளியானது 2001 ஆம் ஆண்டில்தான், அஜித் நடித்த தீனா திரைப்படமும், விஜய் நடித்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படமும் அப்போது வெளியானது. இரண்டு படங்களுமே நல்ல ஹிட் கொடுத்தன. இருவருக்குமே அந்த இரண்டு படங்கள் முக்கியமான திரைப்படங்களாக அமைந்தன

அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு இதே போல விஜய் நடித்த ஆதி மற்றும் அஜித் நடித்த பரமசிவன் இரண்டு திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியாகின. ஆனால் இரண்டு படமே பயங்கரமான தோல்வியை கண்டன. பொதுவாக பொங்கல் தீபாவளி நேரங்களில் எந்த படம் வெளியானாலும் ஓடிவிடும் என்ற நம்பிக்கை அந்த ஆண்டு சுக்கு சுக்காக உடைந்து போனது.

பிறகு 2007 ஆம் ஆண்டும் பொங்கல் அன்று விஜய் நடித்த போக்கிரியும், அஜித் நடித்த ஆழ்வார் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களிலுமே கதாநாயகியாக அசின் நடித்தார்.போக்கிரி திரைப்படம் நல்ல வசூல் சாதனையை படைத்தது. ஆனால் ஆழ்வார் படம் குறிப்பிடத்தக்க வெற்றியை தரவில்லை.

2014 ஆம் ஆண்டு தல தளபதி போட்டியில் ஜில்லாவும் வீரமும் வெளியானது. இரண்டுமே நல்ல வெற்றியை தந்தன. அதற்கு பிறகு 8 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரின் திரைப்படங்களும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வர இருக்கின்றன.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top