Tamil Cinema News
வசூலில் 2.0 வை மிஞ்சிய கூலி.. ரிலீஸ்க்கு முன்னாடியே சம்பவமா.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கி அதில் ஹிட் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே அவர் எப்பொழுது ரஜினியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்தது.
சமீபத்தில் அதனை பூர்த்தி செய்யும் வகையில்தான் தற்சமயம் கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. கூலி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டு அளவில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது.
இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு திரையரங்குகளே ஆவலோடு காத்திருக்கின்றன. பெரும்பாலும் ரஜினி தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
அவரும் அதிக வசூல் கொடுக்கும் ஒரு இயக்குனரும் ஒன்று சேரும்பொழுது அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பதே பலருக்கும் எதிர்பார்ப்பை தூண்டும் விஷயமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இதற்கு முன்பு டிஜிட்டல் உரிமத்தில் அதிக விலைக்கு விற்பனையான திரைப்படமாக ரஜினி நடித்த 2.0 திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படம் 110 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த விலைக்கு அதற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படமும் விற்பனையாகவில்லை அதனை விட குறைவான விலைக்கு தான் திரைப்படங்கள் விற்பனையாகி வந்தன. ஆனால் தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் டிஜிட்டல் உரிமம் மட்டும் 120 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.
எனவே படம் வெளியாவதற்கு முன்பே 2.0 வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.
