பார்த்தவுடன் பட்டாம்பூச்சி பறக்குதே!. கறுப்பு உடையில் அசத்தும் மடோனா!..

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் பல நடிகைகளுக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் முக்கியமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

Social Media Bar

மடோனா செபாஸ்டியன் பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது.

காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மடோனா செபாஸ்டின் அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆனார்.

தொடர்ந்து கவண், பா பாண்டி போன்ற திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.  அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார் மடோனா.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் மீண்டும் வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார். எனவே வெகு நாட்களாக போட்டோக்கள் கூட வெளியிடாமல் இருந்த மடோனா தற்சமயம் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.