வியக்க வைக்கும் புது உலகம்? – வெளியானது ஆண்ட் மேன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர்!

மார்வெல் சினிமாஸில் வெகுநாட்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் குவாண்டமேனியா திரைப்படம். உலக அளவில் மார்வெல் ரசிகர்கள் இந்த படத்திற்கு காத்திருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

இதுவரை வந்த படங்களில் ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குவாண்டம் உலகில் நடப்பதால் படத்தின் மொத்த காட்சி அமைப்பும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் மிஸ் மார்வல் மற்றும் கேப்டன் மார்வெல் வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்ட் மேன் கதாபாத்திரத்தின் மகளுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது.

இனி வரும் ஆண்ட் மேன் திரைப்படங்களில் இவர்தான் ஆண்ட் மேனாகவோ அல்லது வாஸ்ப்பாகவோ வருவார் என கூறப்படுகிறது. ரசிர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்

Refresh