Connect with us

மறுபடியும் பெரிய சுறாமீனா?, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!.. மெக் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது..

Hollywood Cinema news

மறுபடியும் பெரிய சுறாமீனா?, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!.. மெக் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது..

Social Media Bar

ஹாலிவுட்டில் எப்பொழுதும் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பஞ்சமே இல்லை என கூறலாம் அந்த அளவிற்கு ஹாலிவுட்டில் வருகின்ற படங்களில் முக்கால்வாசி படங்கள் அதிக பிரம்மாண்டத்துடன் வருகின்றன. ஆனால் அவற்றில் சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைகின்றன.

மார்வெல் சினிமா , ஸ்டார் வார்ஸ் தொடர்கள் இப்படி சில படங்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன அப்படி 2018 இல் வெளிவந்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் சற்று பிரபலமான ஒரு திரைப்படம் தி மெக்…

இந்த படத்தில் ஜேசன் ஸ்டார்ட்டம் கதாநாயகனாக நடித்திருந்தார் உலகிலேயே மிகப்பெரிய சுறா மீன் ஒன்று கற்பனையாக அந்த படத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை யாரும் பார்க்காத அளவில் பெரிய சுறா மீன் ஒன்றும் அதனுடன் கதாநாயகன் போராடுவது போன்றும் அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சுறா மீன், டைனோசர், பாம்புகள் தொடர்பான படங்கள் வரும்பொழுது அதிலிருந்து தப்பித்து மக்கள் போவது போலவே காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த சுறா மீனை கதாநாயகன் ஜெயிப்பது போல காட்சிகள் அமைந்திருக்கும் அதன் பிறகு தற்சமயம் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் தற்சமயம் மெக் 2 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது. படத்தின் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்

Articles

parle g
madampatty rangaraj
To Top