மேகா ஆகாஷ்க்கும் இப்ப நிச்சயமாயிட்டு வெளியான புகைப்படங்கள்!..

சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டு ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் ஒரு சில நடிகைகள் தாங்கள் அறிமுகமாக முதல் படத்திலிருந்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மேகா ஆகாஷ். இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்நிலையில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த மேகா ஆகாஷ் தற்போது நிச்சயதார்த்தம் செய்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது நிச்சயதார்த்தம் செய்த மேகா ஆகாஷூன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அனைவரும் அதை ஷேர் செய்து வருகிறார்கள்.

நடிகை மேகா ஆகாஷ்

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் லை என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கடந்த 2019 இல் வெளியான பேட்டை மற்றும் ஹிந்தி திரைப்படமான சாட்டிலைட் ஷங்கர் என இரு திரைப்படங்களில் நடித்து பாலிவுட் மட்டும், தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார்.

megha akash
Social Media Bar

பிறகு இவர் ராஜா ராஜா சோரா, டியர் மேகா ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் வரிசையாக நடித்து வந்தார்.

சென்னையில் பிறந்த இவர் தெலுங்கு தந்தைக்கும், மலையாளி தாய்க்கும் பிறந்தார். தன்னுடைய படிப்பை சென்னையில் உள்ள பிரபல பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியில் பயின்று தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

megha akash

தற்போது பல படங்களில் நடித்து வரும் மேகா ஆகாஷ் ரசிகர்களால் ரசிக்கப்படும் நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார்.

விரைவில் திருமணம் செய்ய போகும் மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ் பல படங்களில் தற்போது நடித்து வரும் நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் தற்போது அவருக்கு நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் வெளிவந்து அவரின் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 28 வயதாகும் நடிகை மேகா ஆகாஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.

megha akash

சாய் விஷ்ணுவும், மேகா ஆகாஷூம் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் நிச்சயதார்த்தம் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் திருமணம் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.