Connect with us

என் சம்பளத்துல இருந்து அவருக்கு கொடுங்க! – காகா ராதாகிருஷ்ணனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.!

Cinema History

என் சம்பளத்துல இருந்து அவருக்கு கொடுங்க! – காகா ராதாகிருஷ்ணனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.!

Social Media Bar

வயதானவராக இருந்தாலும் பல திரைப்படங்களில் நகைச்சுவையாளராக நடித்தவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். காகா ராதாகிருஷ்ணன் எம்.ஜி.ஆர் சிவாஜி காலம் முதலே தமிழ் சினிமாவில் இருந்து வருபவர்.

சிவாஜி நாடக கம்பெனியில் பணிபுரிந்த போது அவருடன் சேர்ந்து பணிபுரிந்தவர் இவர்.

தமிழ் சினிமாவில் இந்த நடிகர்கள் பெற்ற உச்சத்தை பெற முடியாவிட்டாலும் கூட நான்கு தலைமுறையாக தமிழ் சினிமாவில் இருந்தவர் காகா இராதாகிருஷ்ணன்.

1959 இல் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான திரைப்படம் தாய் மகளுக்கு கட்டிய தாலி. இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் காகா இராதாகிருஷ்ணனும் நடித்திருந்தார்.

படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தபோது காகா இராதாகிருஷ்ணனை சந்தித்த எம்.ஜி.ஆர்

“உங்களுக்கு சம்பளம் எவ்வளவு?” என கேட்டுள்ளார்.

அதற்கு காகா இராதகிருஷ்ணன் “மூவாயிரம் ரூபாய்” என கூறியுள்ளார்.

உடனே தயாரிப்பாளரை அழைத்த எம்.ஜி.ஆர் ”ஏன் இவருக்கு இவ்வளவு குறைவாக சம்பளம் தருகிறீகள். அவருக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளமாக தாருங்கள். அதற்காக எனது சம்பளத்தில் இரண்டாயிரம் குறைத்து கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார் காகா இராதாகிருஷ்ணன்.

To Top