Tamil Cinema News
ரஜினிகாந்த் படம் கொடுத்த வசூல்… ஆடிப்போன எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கு பிறகு வந்த நடிகர்கள் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தனர்.
அதுவரை இருந்த தமிழ் சினிமாவில் இருந்து பிறகு கமலஹாசன் ரஜினிகாந்த் வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதே சமயத்தில் தான் சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் என்று பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தனர்.
தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்தை எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் எல்லோரும் உயிரோடு இருக்கும் பொழுதே பார்த்து இருந்தனர். இந்த நிலையில்தான் முரட்டுக்காளை திரைப்படம் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக இருந்தது.
சினிமா துறை இவ்வளவு பெரிய வளர்ச்சி பெறும் என்பது எம்ஜிஆரே எதிர்பார்க்காத ஒரு விஷயமாக இருந்தது. முரட்டுக்காளை திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து அதிக வரவேற்பு பெற்ற படமாக அது இருந்தது.
தமிழ்நாடு முழுக்க பட்டி தொட்டி எங்கும் முரட்டுக்காளை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் டிக்கெட் விலை எக்கச்சக்கமாக அதிகரித்து கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையாகி இருந்தது.
எம்.ஜி.ஆர் காலத்தில் 50 பைசா ஒரு ரூபாய் என்ற ரீதியில் தான் டிக்கெட் விலை இருந்தது ஆனால் முரட்டுக்காளை திரைப்படத்தின் டிக்கெட் விலை 300 ரூபாய் விற்பனையானது.
எம்.ஜி.ஆர்க்கு இது அதிர்ச்சியை கொடுத்தது என்ன ரஜினி இந்த பின்னு பின்ராறு என்று இது குறித்து அவர் ஆச்சரியமாக கூறி இருக்கிறார் எம்.ஜி.ஆர். இதனை முக்தா ரவி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
