நம்பி ஆரம்பிச்சேன்.. தோனி தொடங்கிய பட கம்பேனி! – கண்டுக்காத பிரபலங்கள்!

இந்தியாவில் சினிமாவிற்கு பிறகு அதிகமாக கொண்டாடப்படுவது கிரிக்கெட்டும், கிரிக்கெட் வீரர்களும்தான்.

MS Dhoni

அவ்வாறாக இந்திய கிரிக்கெட்டில் பிரபலமான இருந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.

தமிழ்நாட்டில் தோனிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் தற்போது தமிழில் சினிமா எடுக்கும் முயற்சியில் சென்னை திருவான்மியூரில் ஆபீஸ் போட்டுள்ளாராம் தோனி.

MS Dhoni Vijay

தனது தயாரிப்பு கம்பெனிக்கு ஒரு படம் நடிக்குமாறு விஜய், நயன்தாரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களிடம் தோனி பேசி வருகிறாராம். ஆனால் விஜய் ஏற்கனவே அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் ஆகியிருப்பதாலும், நயன்தாரா திருமண பிஸியில் இருப்பதாலும் இப்போதைக்கு நோ சொல்லிவிட்டார்களாம்.

கிரிக்கெட்டில் ஸ்டாராக இருந்தாலும் அவரது கம்பெனிக்கு படம் நடிக்க யாரும் முன் வராதது தோனிக்கு லைட்டாக வருத்தத்தை அளித்துள்ளதாம்.

Refresh