Connect with us

உன் படத்துல நடிக்கணும்னா இதான் என்னோட ரூல்ஸ்!.. எம்.எஸ்.வி பேச்சால் மனம் உருகி போன படக்குழு!..

MSV

Cinema History

உன் படத்துல நடிக்கணும்னா இதான் என்னோட ரூல்ஸ்!.. எம்.எஸ்.வி பேச்சால் மனம் உருகி போன படக்குழு!..

Social Media Bar

Tamil Music Director MS viswanathan : தமிழ் இசை கலைஞர்களில் மிகவும் போற்றப்படும் ஒரு இசையமைப்பாளராக இருப்பவர் எம்.எஸ் விஸ்வநாதன். மெல்லிசை மன்னன் என சினிமாவில் போற்றப்படும் அளவிற்கு எக்கச்சக்கமான பாடல்களை கொடுத்துள்ளார்.

முக்கியமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இவர் நெருக்கமானவர். கண்ணதாசனுடனும் இவருக்கு நல்ல பழக்கமிருந்தது. ஆரம்பத்தில் எம்.எஸ்.வி அவரது நண்பர் ராமமூர்த்தியுடன் சேர்ந்துதான் பாடல்களுக்கு இசையமைத்து வந்தார். அப்போதெல்லாம் திரைப்படங்களில் இசை விஸ்வநாதன் ராம மூர்த்தி என்றுதான் வந்துக்கொண்டிருந்தது.

ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட சின்ன தகராறே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் தனியாகவே இசையமைத்த எம்.எஸ்.வி புகழின் உச்சத்திற்கே சென்றார் என கூறலாம்.

பிற்காலத்தில் சினிமாக்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார் எம்.எஸ்.வி. ஆனால் அவருக்கு சினிமாவில் நடிப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் காதல் மன்னன் (Kathal Mannan) திரைப்படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்னும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.வியை நடிக்க வைக்க மிகவும் ஆசைப்பட்டார் விவேக்.

எனவே இதுக்குறித்து எம்.எஸ்.வியிடம் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த எம்.எஸ்.வி சம்பளத்தில் சரி பாதி பணத்தை எனது நண்பன் ராம மூர்த்தி கொடுத்து விடுங்கள் நான் நடிக்கிறேன் என கூறியுள்ளார். உண்மையில் ராம மூர்த்தி அப்போது திரைத்துறையில் பிரபலமாக இல்லை. எனவே நன்றி மறக்காமல் அப்போதும் அவருக்கு உதவி செய்துள்ளார் எம்.எஸ்.வி.

To Top