Cinema History
என் விருப்பத்துல என் கல்யாணம் நடக்கல..! – திருமணம் குறித்து கூறிய விஜய்
இப்போது பெரும் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் ஒரு காலத்தில் சாதரண சின்ன நடிகர்களாக இருந்தவர்கள்தான். சினிமா பிரபலங்களில் பலரும் காதல் திருமணம் செய்துகொண்டாலும் ஒரு சிலர் அதில் அரெஞ்ச் மேரேஜ் செய்துக்கொள்வார்கள்.

இதற்கு பெரிய ஹீரோக்கள் கூட விதி விலக்கு கிடையாது. அந்த வகையில் தமிழின் பிரபல ஹீரோவான விஜய்யின் திருமணம் அரெஞ்ச் மேரேஜ் என்பது பலருக்கும் தெரியும்.
விஜய் வீட்டில் கல்யாண பேச்சு எடுத்தபோது என்ன நிகழ்ந்தது என்பது குறித்து சன் டிவியில் முன்பொரு பேட்டியில் விஜய் பேசியிருந்தார். அப்போது கூறும்போது விஜய்யின் தந்தை சந்திரசேகர் ஒருநாள் திடீரென தனியாக பேச வேண்டும் என விஜய்யை அழைத்தாராம்.
அப்பா தனியாக அழைக்கிறார் என்றாலே அப்போதெல்லாம் விஜய்க்கு பயம் வந்துவிடுமாம். ஆனால் அவரை தனியாக அழைத்த சந்திரசேகர். சங்கீதாவை பற்றி என்ன நினைக்கிறாய் என கேட்டுள்ளார். விஜய்யும் எதார்த்தமாக அவருக்கென்ன அவர் நல்ல பெண்தான் என்றாராம். அப்படியெனில் நீ சங்கீதாவை திருமண செய்துக்கொள்கிறாயா? என தந்தை கேட்கவும் விஜய்க்கு தூக்கி வாரி போட்டுள்ளது.
வீட்டில் அனைவருக்கும் பிடித்துள்ளது. உனக்கும் அந்த பெண்ணை பிடித்திருந்தால் திருமணம் செய்து வைக்கிறோம் என கூறியுள்ளனர். விஜய் தனது தாய் தந்தை விரும்பினால் போதும் திருமணம் நடத்தி வைக்கட்டும். அவர்களுக்கு பிடித்திருந்தாலே போதும் என முடிவெடுத்துள்ளார். எனவே தந்தையிடம் நீங்கள் என்ன செய்தாலும் சரி அப்பா என கூறியுள்ளார்.
எனவே விஜய்யின் திருமணமானது பெற்றோரின் விருப்பத்தின் பேரிலேயே நடந்துள்ளது என தெரிகிறது.
