Connect with us

ஆபிஸை விட்டு வெளிய போயா!.. பாண்டியராஜனை கடுப்பேத்திய மிஸ்கின்…

Cinema History

ஆபிஸை விட்டு வெளிய போயா!.. பாண்டியராஜனை கடுப்பேத்திய மிஸ்கின்…

cinepettai.com cinepettai.com

தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும் கூட அந்த படத்தில் வந்த வாழ மீனுக்கும் வெளங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் மிகவும் பிரபலமானது.

அதனை தொடர்ந்து அஞ்சாதே படத்தை இயக்கினார் மிஸ்கின். அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. அஞ்சாதே திரைப்படத்தில் பாண்டியராஜனை நடிக்க வைக்கலாம் என்கிற யோசனை மிஸ்கினுக்குதான் வந்தது.

உடனே அவர் சென்று பாண்டியராஜனை சந்தித்தார். அஞ்சாதே படத்தின் கதையை கூறி அதில் ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என பாண்டியராஜனிடம் கூறினார். அதை கேட்ட பாண்டியராஜன் அதிர்ச்சியடைந்துவிட்டார்.

நான்லாம் வில்லனாக நடிச்சா யாராவது பார்ப்பாங்களாயா என கேட்டார். அதற்கு சமாதான படுத்திய மிஸ்கின், பாண்டியராஜனிடம் அவரது மீசையையும் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதை கேட்டதும் பாண்டியராஜன் கடுப்பாகிவிட்டார்.

என் 17 வயதில் எனக்கு மீசை முளைத்தது. அப்போது முதல் இப்போது வரை நான் மீசையை எடுத்ததே கிடையாது. என்னை போய் மீசை எடுக்க சொல்கிறாய். ஒழுங்காக அலுவலகத்தை விட்டு வெளியே போ என சத்தம் போட்டுவிட்டார்.

இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தி அஞ்சாதே திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் மிஸ்கின். அதே போலவே அந்த படத்தில் பாண்டியராஜனின் கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

POPULAR POSTS

To Top