மிஷ்கின் வாய்க்கு பூட்டு? இயக்குனர் சங்கம் குட்டு?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். அஞ்சாதே தொடங்கி இவரது படங்கள் பெரும் ஹிட் இல்லை என்றாலும், தோல்வியும் இல்லாத அளவு டீசண்ட்டான கலெக்சனை பெறுபவை.

சமீபத்தில் விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மிஷ்கின் அதிலிருந்து விலகினார்.

அதன்பின்னர் மேடை ஒன்றில் விஷாலை அவர் திட்டி பேசியது வைரலானது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து மேடைகளில் சில இயக்குனர்கள், நடிகர்களை நேரடியாக அவர் விமர்சிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் கலகத்தலைவன் ட்ரெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், உதயநிதி தனது நடிப்பில் படம் நடிக்காமல் வீணாய்போன இயக்குனர் ராஜேஷ் படத்தில் நடித்ததாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மேடைகளில் மற்ற இயக்குனர்களை மிஷ்கின் தாக்கி பேசுவதாகவும், அவரது பேச்சுக்காக ராஜேஷிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் இயக்குனர் சங்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிறகாவது மிஷ்கின் மற்றவர்களை சிறுமைப்படுத்தி பேசாமல் இருக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Refresh