உங்க ரூல்ஸ்க்கு எல்லாம் படம் வெளியிட முடியாது! – நயன்தாரா படத்திற்கு எதிரான பிரச்சனை?

தமிழில் நடிகைகள் மார்க்கெட்டில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தற்சமயம் வரிசையாக சிங்கிள் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அதாவது அவரது படங்களில் கதாநாயகிகளே இருப்பதில்லை. தொடர்ந்து சிங்கிள் கதாபாத்திரமாக நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடித்த ஓ2 என்கிற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் அடுத்து அவர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் கனெக்ட். இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் குமார் இயக்குகிறார். த்ரில்லர் திரைப்படங்களுக்கு புகழ்ப்பெற்ற ஒரு இயக்குனராக அஸ்வின் குமார் இருக்கிறார்.

ஏற்கனவே அவர் இயக்கி வெளியான கேம் ஓவர், மாயா இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன. கனெக்ட் படமும் ஒரு த்ரில்லர் படமாகும். படத்தின் மொத்த நேரம் 90 நிமிடங்கள் என கூறப்படுகிறது.

எனவே இந்த படத்தில் இடைவேளையே வைக்கவில்லையாம் அஸ்வின் குமார். இந்த விஷயத்தை சில நாட்களுக்கு முன்புதான் வெளியிட்டார் அஸ்வின். இதனால் திரையரங்க முதலாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.

ஏனெனில் இடைவெளியில் விற்பனையாகும் உணவு பொருளில் கிடைக்கும் லாபம் கிடைக்காமல் போகுமே? என்பதால் இயக்குனர் மீது இவர்கள் கோபம் கொண்டுள்ளனர்.

மேலும் இந்த விஷயத்தை அஸ்வின் குமார் முன்பே குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுக்குறித்து திரையரங்க முதலாளிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வருகிற 22 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

Refresh