ஒரு வழியாக முடிவுக்கு வந்த நயன்தாரா சுந்தர் சி பஞ்சாயத்து..!

நயன்தாராவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே சமீபகாலமாகவே பிரச்சனை ஒன்று இருந்து வந்ததாக பேச்சுக்கள் இருந்தன. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று நயன்தாரா ஆசைப்பட்டார்.

ஆனால் மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடித்த நடிகர் ஆர்.ஜே பாலாஜி மாசாணி என்கிற இன்னொரு அம்மன் படத்தை இயக்க சென்று விட்டார். எனவே நயன்தாரா ஒரு நல்ல இயக்குனரை வைத்து காமெடி திரைப்படமாக மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அதனை தொடர்ந்து முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனத்திடம் இது குறித்து பேசினார். வேல்ஸ் நிறுவனமும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஆனாலும் கூட இயக்குனர் யார் என்று முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில்தான் இயக்குனர் சுந்தர் சியிடம் இது பற்றி பேசப்பட்டது. சுந்தர் சியும் இதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பை துவங்கலாம் என்று இருந்தார் சுந்தர் சி.

mookuthi amman
mookuthi amman
Social Media Bar

ஆனால் நயன்தாரா கால் சீட் கொடுப்பதில் தாமதம் செய்து கொண்டே இருந்தார். இதனால் சுந்தர் சி தற்சமயம் மதகஜராஜா திரைப்படம் வெற்றியை தொடர்ந்து விஷாலை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்தார்.

மேலும் சந்தானத்தை வைத்து அவர்கள் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் அதற்கான வேலைகளும் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நயன்தாரா கால் சீட் கொடுக்காததால் சுந்தர் சி வேறு படங்களை இயக்க சென்று விட்டார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் ஒரு வழியாக சமரசமாகி மார்ச் மாதம் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.