பா.ரஞ்சித் பண்ணுன இந்த தப்பால் உயிர் போயிட்டு.. வெளிப்படையாக கூறிய பிரபலம்..!
இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் தற்சமயம் உருவாகி வரும் வேட்டுவன் திரைப்படம் குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் நடந்தது அதில் நடந்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது அதில் பணிபுரிந்த எஸ்எம் ராஜு என்கிற நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இது குறித்த பேச்சுக்கள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் சின்ன அளவில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் சின்ன சின்ன வசதிகளை கூட படப்பிடிப்பு தளங்களில் செய்து தருவதில்லை. இதுக்குறித்து வலைப்பேச்சு பிஸ்மி கூறும் பொழுது தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள் படமாக எடுக்கும்பொழுது எப்போதுமே அங்கு ஆம்புலன்ஸ் வசதியை செய்து வைத்திருக்கின்றனர்.
யாராவது ஒருவருக்கு அடிபட்டாலோ ஏதாவது தவறுதலாக நேர்ந்தாலோ படப்பிடிப்பு தளத்திலிருந்து உடனடியாக அவரை ஆம்புலன்ஸ்க்கு கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் அந்த வசதியை கூட தமிழ் சினிமாவில் செய்யப்படாமல் இருந்தது இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறுகிறார்.
மேலும் இது குறித்து தமிழ் சினிமா முன்னேறியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.