சிவகார்த்திகேயனுக்கும் விஜய்க்கும் வந்த போட்டி.. இது என்ன புது கதை..!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். கிட்டதட்ட 400 கோடி வரை ஓடி பெரிய வெற்றியை கொடுத்தது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம்.

அதற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் பராசக்தி திரைப்படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைக்களம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தோடு போட்டி போட இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

Social Media Bar

சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு அவர் விஜய்யுடன் போட்டியிட முடியுமா? என்கிற ஒரு கேள்வி இருந்து வந்தாலும் கூட பராசக்தி படத்தின் கதை களத்தின் காரணமாக அந்த படம் ஓடுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் விஜய்யுடன் போட்டி போட்டு படத்தை வெளியிட மாட்டார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும் பொழுது பொங்கல் விடுமுறையை பொறுத்தவரை இரண்டு திரைப்படங்கள் வெளியாவது என்பது இரண்டு படத்திற்குமே நல்ல வெற்றியை தான் பெற்று தரும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.