எனக்குலாம் சினிமா எடுக்க தகுதி இல்லைனு நினைச்சேன்.. பார்த்திபனுக்கு டர்னிங் கொடுத்த கமல் படம்..!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக மாறியவர் நடிகர் பார்த்திபன். பார்த்திபன் ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து வந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்படம் இயக்குவதன் மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் பிறகு தனியாக திரைப்படங்களை இயக்க துவங்கினார். பார்த்திபனை பொருத்தவரை இப்பொழுதும் கூட தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை எடுத்து வரும் இயக்குனர் என்று அவரை கூறலாம்.

தொடர்ந்து மற்ற இயக்குனர்கள் மாதிரி ஒரே மாதிரியான திரைப்படங்களை இயக்காமல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து இயக்க கூடியவர் பார்த்திபன். அதனாலேயே பார்த்திபனுக்கு என்று தனிப்பட்ட மரியாதையும் மதிப்பும் தமிழ் சினிமாவில் உண்டு.

Social Media Bar

இந்த நிலையில் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் குறித்து அவர் பேட்டியில் கூறும்போது நான் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் எனக்கு வாய்ப்புகளே அதிகம் கிடைக்கவில்லை.

அதனால் தமிழ் சினிமாவின் மீது எனக்கு அதிக கோபம் இருந்தது ஏன் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றெல்லாம் சினிமாவை திட்டிக் கொண்டு இருந்திருக்கிறேன். ஆனால் அந்த சமயத்தில் தான் நாயகன் திரைப்படம் வெளியானது.

நாயகன் திரைப்படம் முழுக்க முழுக்க வேறு மாதிரி இருந்தது. அந்த படத்தை பார்த்து முடித்த பிறகு நான் ஒன்றை மட்டும் முடிவு செய்தேன் எனக்கு சினிமாலாம் எடுக்க தகுதியே கிடையாது. ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு சிறப்பான படமாக நாயகன் இருந்தது.

காட்சிப்படுத்துவதில் தான் படத்தின் முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நாயகன் படத்திலிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.

.