இரண்டு முக்கிய நாடுகளில் வெளியாகாத பிசாசு – எந்த நாடுகள் தெரியுமா?

இயக்குனர் மிஸ்கின் இயக்கி தமிழில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படம் பிசாசு. பொதுவாக பேய் என்றாலே பலரையும் அழிக்க கூடியது.

தன்னை கொன்றவரை பழி வாங்க கூடியது என்கிற நிலையிலேயே திரைப்படங்கள் வந்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில், முதன் முதலாக தன்னை கொன்ற நபரை காப்பாற்றும் ஒரு கதாபாத்திரமாக பிசாசு படத்தில் பேய் கதாபாத்திரம் இருந்தது. 

Pisasu 2 movie poster

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவை வைத்து இயக்குனர் மிஸ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தை உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. பேன் வேர்ல்டு படம் என்பதால் இந்தியாவில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. ஆனால் உலக அளவில் சிங்கப்பூர், மலேசியா தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் இந்த படம் வெளியாக போவதாக கூறப்படுகிறது.

எதனால் இந்த இரண்டு நாடுகளில் படம் வெளியாகவில்லை என தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர் மலேசியாவில் படம் வெளியாகாதது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Tags:

Refresh