Connect with us

காசு கொடுக்க கூடாதுன்னு நடந்த வேலையா? -பொன்னியின் செல்வனில் நடந்த தவறு.

News

காசு கொடுக்க கூடாதுன்னு நடந்த வேலையா? -பொன்னியின் செல்வனில் நடந்த தவறு.

Social Media Bar

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி தற்சமயம் உலக அளவில் ஹிட் கொடுத்து வரும் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். பொன்னியில் செல்வன் திரைப்படமானது அமரர் கல்கியின் கதையாகும். இந்த கதையை 60 வருடங்களாக திரைப்படமாக எடுக்க முயற்சிகள் மேற்க்கொண்டு வரும் நிலையில் தற்சமயம் இது திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் அமரர் கல்கிக்கு சரியான உரிமை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்துவிட்டு திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவருமே ஒவ்வொரு காட்சியுமே புத்தகத்தில் உள்ள காட்சிதான் என கூறியுள்ளனர்.

ஆனால் திரைப்படத்தில் போடும்பொழுது மூலக்கதை கல்கி என போடப்பட்டுள்ளது. மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு மொத்த கதையையும் மாற்றி அமைத்தால் மட்டுமே அப்படி மூலக்கதை என போட வேண்டும் என கூறப்படுகிறது.

மேலும் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை புத்தகமாக போடுவதைதான் அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இதனால் யார் வேண்டுமானாலும் அதை புத்தகமாக போடலாம்.

ஆனால் அந்த கதையை படமாக எடுக்க வேண்டும் எனில் கல்கியின் குடும்பத்தினருக்கு அதற்கான ராயல்டி தொகையை கொடுக்க வேண்டும். இந்த செலவை தவிர்ப்பதற்காகவே படத்தில் மூலக்கதை என்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் கதைக்கான உரிமை கல்கியைதான் சேரும் என்பதால் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top