வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரஜினி படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. கூலி திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஏனெனில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பதே பலரது ஆசையாக இருந்தது. ஒரு வழியாக அது நினைவாகும் ஒரு இடமாக கூலி திரைப்படம் இருக்கிறது.
கூலி திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக மக்கள் வெகுவாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று படம் குறித்து ஒரு அப்டேட் வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று காலை நடிகை பூஜா ஹெக்தே கூலி திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்தே தற்சமயம் தமிழில் வரவேற்பை பெற்று வருகிறார். பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்கிறார்.
சூர்யா நடிக்கும் மெட்ரோ திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார். அதே சமயம் இப்பொழுது கூலி திரைப்படத்திலும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் பூஜா ஹெக்தே.