சும்மா அள்ளுது..! கிளாமர் குயின் பூனம் பஜ்வாவின் அசத்தும் லுக்
தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானாலும் கூட தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றவராக இருப்பவர் நடிகை பூனம் பஜ்வா. முதன்முதலாக தமிழில் சேவல் என்கிற திரைப்படத்தின் மூலமாக பூனம் பஜ்வா அறிமுகமானார்.
ஆனால் சேவல் திரைப்படத்தை விடவும் தெனாவட்டு திரைப்படம் தான் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தெனாவட்டு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜீவாவுடன் சேர்ந்து கச்சேரி ஆரம்பம் என்கிற திரைப்படத்தில் நடித்தார் பூனம் பஜ்வா.
அதற்கு பிறகு அவருக்கு துரோகி, தம்பிக்கோட்டை மாதிரியான படங்களில் எல்லாம் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் புது நடிகைகளின் வரவுக்கு பிறகு பூனம் பஜ்வாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தது.
அதற்குப் பிறகு மலையாள சினிமாவில் முயற்சி செய்தார். பூனம் பஜ்வா 2011ல் இருந்து 2014 வரை மலையாள சினிமாவில் வாய்ப்பை பெற்று நடித்து வந்தார்.
அதற்கு பிறகு ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆடி அதன் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 மாதிரியான படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது பெரிதாக வரவில்லை.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார் பூனம் பஜ்வா. அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.