News
நான் கத்துக்குட்டிதான்.. ஆனா கத்துக்கிட்டேன்! – பழைய போஸ்ட்டுகள் குறித்து ப்ரதீப்!
தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தை இயக்கி அறிமுகமானவர் ப்ரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து அவரே இயக்கி, நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இந்த படம் வெற்றிகரமாக ஓடி வருவதுடன் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் ப்ரதீப் ரங்கநாதனின் பழைய பேஸ்புக் பதிவுகளை எல்லாம் தோண்டி எடுத்து ட்ரெண்ட் செய்துள்ளார்கள் நெட்டிசன்கள். திரைத்துறைக்குள் நுழையாத காலத்தில் அவர் பதிவிட்ட அமெச்சூர் பதிவுகளை தொடர்ந்து பலரும் பரப்பி வந்ததோடு மேலும் சிலர் இன்னும் கொஞ்சம் முன்னே சென்று அவர் பதிவிட்டது போன்ற எடிட் செய்யப்பட்ட பதிவுகளையும் பரப்பியுள்ளனர். இதனால் பேஸ்புக் பக்கத்தையே டீ ஆக்டிவேட் செய்துள்ளார் ப்ரதீப்.
மேலும் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டன.ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி.
மேலும் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதை சரிசெய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
