Bigg Boss Tamil
ஓ$#@ டேய்.. பைத்தியக்கார பு%#@..! அந்த வார்த்தைய சொல்லி திட்டிய ப்ரதீப்! – பிக்பாஸ் வீட்டில் ரகளை!
பரபரப்பான பிக்பாஸ் ஏழாவது சீசனில் இந்த வாரம் ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டாரும், ஸ்மால் ஹவுஸ் வீட்டாரும் ஆக்சிஜன் பாட்டில்கள் எனப்படும் கேன்களை தங்களால் முடிந்த அளவு மற்றவர்களிடமிருந்து கைப்பற்றி மறைத்து பதுக்கி வைக்க வேண்டும் என பிக்பாஸ் தெரிவித்திருந்தார்.
இதற்காக ஸ்மால் ஹவுஸ் வீட்டாரும், பிக்பாஸ் வீட்டாரும் பாட்டில்களை அள்ளிக்கொண்டு ஓட ஒருவரிடமிருந்து மற்றொருவர் பறிக்க முயல, பிக்பாஸ் வீடே சண்டைக் களமாக காட்சியளிக்கிறது. இதில் விஷ்ணுவிடம் இருந்து பாட்டில்களை கைப்பற்ற விஜய் அவரை தாக்குவது போல சென்றதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க ஸ்மால் ஹவுஸ் வீட்டின் மாயா, பிரதீப் சில ஆக்ஸிஜன் பாட்டில்களை எடுத்து சென்று ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்குள் வைத்து விட்டனர். யாரும் உள்ளே நுழையாமல் இருக்க கதவையும் மறைத்து நின்று கொண்டிருந்தனர். அவர்களை விலக்கி விட்டு எப்படியாவது பாட்டில்களை எடுத்துச் செல்ல நினைக்க நிக்சன் கதவை வேகமாக மோதி திறக்க முயன்றார். அது கண்ணாடி கதவு என்பதால் திடீரென உடைந்து கண்ணாடி துண்டுகளாக கொட்டியது. இதில் மாயா நிக்சன் இருவருக்குமே கண்ணாடிகள் குத்தி காயங்கள் ஏற்பட்டன.
நிக்சன் மோதி கண்ணாடி கதவு உடைந்த ஆத்திரத்தில் பிரதீப் அவரை “டேய் பைத்தியக்கார டேஷ்” என்று ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி திட்டிவிட்டார். மறுபடியும் கூட ”உயிருக்கு ஏதாவதுன்னு ஆயிருச்சுனா என்னடா பண்ணுவ பாடு” என்ற வார்த்தையும் சொல்லி திட்டியது லைவில் ஒளிபரப்பாகியுள்ளது.
பிறகு நிக்சன் மன்னிப்பு கேட்டதும் பிரதீப் அமைதியாகிவிட்டார். ஆனால் கெட்ட வார்த்தையில் பலர் முன்னே நிக்சனை பிரதீப் திட்டியதற்காக இந்த வாரம் இறுதியில் கமல்ஹாசன் அவரை கண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.