டிவி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக வந்து சினிமாவில் நடிகையானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். அதனாலேயே மற்ற கதாநாயகி போல் அதிக மேக்கப் எலலம் செய்துக்கொள்ளாமல் மிகவும் சிம்பிளாக இருப்பார் ப்ரியா.

கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொலைக்காட்சி தொடரில் முதன் முதலாக தோன்றினார் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு மேயாத மான் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மேயாத மான் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்றது. இதையடுத்து சினிமாவில் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்தது.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்தார். தற்சமயம் பத்து தல, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவரது புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.