Actress
கருப்பு புடவையில் செமையா இருக்கீங்க? – கலக்கும் ரோஜா நடிகை!
சன் டிவி தொடர்களில் சில தொடர்களை கதாநாயகிகளுக்காக ஒரு மக்கள் கூட்டம் பார்ப்பதுண்டு. அப்படி வெகுநாட்களாக டி.ஆர்.பியில் டாப் ரேஞ்சில் இருந்த நாடகம்தான் ரோஜா.

ரோஜா நாடகம் 2018 ஆம் ஆண்டு துவங்கியது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்த நாடகம் சன் டிவியில் ஒளிப்பரப்பானது. இடையில் கொரோனா சமயத்தில் மட்டும் நாடகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில் ரோஜாவாக நடித்தவர்தான் நடிகை நடிகை ப்ரியங்கா நல்கரி. இவருக்கென்று தனியாக ஒரு ரசிக வட்டாரம் உண்டு. ரோஜா நாடகம் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி ஓடியது. ஆனால் இறுதிவரை கதாநாயகியை மட்டும் மாற்றவே இல்லை.

இதற்கு இடையே 2021 ஆம் ஆண்டு ஹைப்பர் எனும் வெப் சீரிஸில் ப்ரியங்கா நடித்திருந்தார்.

தற்சமயம் ரோஜா சீரியல் சன் டிவியில் முடிவுற்றது. இந்நிலையில் ரசிகர்களிடையே ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ப்ரியங்கா நல்கரி.
