அடுத்த விஜய் சேதுபதி படம் சீக்கிரமே வருது – அறிவித்த தயாரிப்பாளர்

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாய் நடிப்பதை விடவும் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால் முன்பெல்லாம் வருடத்திற்கு அதிக படங்கள் கொடுத்து வந்த விஜய் சேதுபதி இப்போது அந்த அளவிற்கு திரைப்படங்கள் கொடுப்பதில்லை.

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் அடுத்த படம் இடம் பொருள் ஏவல், இந்த படத்தில் இவருடன் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார். இந்த படத்தை திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்சமயம் திரைப்படம் குறித்த தகவலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது 

”அன்புடையீர் வணக்கம்.

எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் மதிப்பும் மரியாதைக்குரிய அன்பு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும் திபாவளி வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறோம்.

இயக்குனர் திரு N.லிங்குசாமி வழங்க திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு சிறுராமசாமி அவர்களின் இயக்கத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கதையில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தினை தயாரித்து இருக்கிறோம்.

இப்படத்தில் மக்கள் செல்வன் திரு விஜய் சேதுபதி அவர்களும், நம்பிக்கை நாயகன் திரு விஷ்ணு விஷால் அவர்களும், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா மற்றும் வடிவுக்கரசி நடித்திருக்கின்றனர். அவர்களும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் பாடல்களுக்கு முதல் முறையாக திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால் இப்படத்தை மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”

எனவே விரைவில் நாம் விஜய் சேதுபதி திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என நம்பப்படுகிறது.

Refresh