Connect with us

டூரிஸ்ட் பேமிலி அளவுக்கு வரலை.. 3 நாளில் ஏஸ் படத்தின் வசூல்..!

Tamil Cinema News

டூரிஸ்ட் பேமிலி அளவுக்கு வரலை.. 3 நாளில் ஏஸ் படத்தின் வசூல்..!

Social Media Bar

மகாராஜா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும் கூட அடிக்கடி விஜய், அஜித் மாதிரியான ஒரு கமர்சியல் திரைப்படத்தை வழங்குவதை விஜய் சேதுபதி வழக்கமாக கொண்டு வருகிறார்.

ஆனால் அப்படியாக அவர் நடிக்கும் படங்கள் தான் பெரிதாக வரவேற்பை பெறுவதே கிடையாது. இதற்கு முன்பாக நடித்த சங்கத்தமிழன், டிஎஸ்பி மாதிரியான திரைப்படங்களுக்கு எல்லாம் மகாராஜா மாதிரியான ஒரு வரவேற்பு வரவே இல்லை.

இந்த நிலையில் அதே வகையில் இப்பொழுது அவர் நடித்திருக்கும் திரைப்படம் தான் ஏஸ். இந்த திரைப்படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கியிருக்கிறார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார்.

யோகி பாபு, பிரித்திவிராஜ், அவினாஷ், திவ்யா பிள்ளை போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் இப்பொழுதும் இந்த படத்திற்கு பெரிதான வரவேற்பு என்பதை கிடைக்கவில்லை.

மே 23ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரையில் நான்கு கோடி ரூபாய் தான் வசூல் செய்திருக்கிறது.

To Top