ஆபாச அக்காக்கள் இந்த விஷயங்களை உடனே நிறுத்தணும்.. பகீர் கொடுத்த ரச்சிதா மகாலெட்சுமி..!

சமீப காலங்களாகவே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது அதிகரித்து வருகிறது. பலருக்கும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி எளிமையாக சம்பாதிக்க முடிகிறது. அதனை தொடர்ந்து நடிகைகளை தாண்டி மார்க்கெட் பெற்ற பெண்கள் பலர் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களை குறித்து சினிமா நடிகையும், பழைய பிக்பாஸ் பிரபலமும் ஆன ரச்சிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது இப்போது அக்கா என்கிற உறவு முறையையே கேவலப்படுத்துவது போல ஆக்கிவிட்டனர்.

Social Media Bar

நிறைய அக்காக்கள் சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோக்களை பதிவிட துவங்கியுள்ளனர். சாதாரணமாக வீடியோக்களை பதிவிட்டால் வரவேற்பு கிடைக்காது என இவ்வாறு செய்கின்றனர். இது தவறான விஷயமாகும். ஆனால் அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது.

மக்களும் அந்த மாதிரியான வீடியோக்களை அதிகமாக பார்க்கின்றனர். அவற்றை லைக் செய்கின்றனர். எனவே மக்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. அவர்களுமே அந்த மாதிரி வீடியோக்களை லைக் செய்ய கூடாது என கூறியிருக்கிறார் ரச்சிதா.