பீச்ல புது ரக போட்டோ ஷூட் – அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்தியாவில் நடிகைகள் பலர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் பிடிக்கவே விரும்புகின்றனர். ஏனெனில் சமபளம் மற்றும் சினிமா மார்க்கெட் இரண்டுமே தமிழ், தெலுங்கு சினிமாவில்தான் அதிகமாக உள்ளது.

அந்த வகையில் இந்த இரண்டு சினிமாக்களிலுமே பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க இவருக்கு அறிமுக படமாக இருந்தாலும், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம்தான் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அந்த படத்தில அவரை மிகவும் அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் ஹெச்.வினோத்.

இதற்கு பிறகு தமிழில் அதிக பட வாய்ப்புகளை பெற்றார் ரகுல் ப்ரீத் சிங். ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தார். கார்ப்பரேட் கதாபாத்திரம் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அவ்வளவாக செட் ஆகவில்லை.

இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. ஆனால் தெலுங்கு சினிமாவில் இன்னமும் அவர் பிரபலமாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் அசத்தலாக சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

Refresh