என்ன வேலைக்கு கூட்டிட்டு வந்து என்ன செய்ய சொல்ற? – அண்ணாமலை படப்பிடிப்பில்  ரஜினியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இயக்குனர்!

ரஜினியை வைத்து மாஸ் படங்கள் கொடுத்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் சுரேஷ் கிருஷ்ணா, இவர் ரஜினியை வைத்து இயக்கிய பாட்ஷா, அண்ணாமலை, வீரா மூன்று படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும்.

அவர் இயக்கி ரஜினி நடித்து பெரிதாக வரவேற்பை பெறாத படம் என்றால் அது பாபா திரைப்படம் மட்டும்தான்.

அண்ணாமலை படத்தை எடுக்கும்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். அண்ணாமலை படத்தில் வந்தேண்டா பால்காரன் பாடலை ஊட்டியில் எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. பாடல் முழுக்க முழுக்க பகல் நேரத்தில் படம் பிடிக்கப்பட்டது.

இதனால் மாலை நேரங்களில் ரஜினி வேலை இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்தார். தினமும் அந்த பாடலின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. இந்த சமயத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் ஊட்டியில் உள்ள ஒரு மலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம் ரஜினி.

அதை பார்த்த சுரேஷ் கிருஷ்ணாவிற்கு திடீரென என்னவோ தோன்ற வேக வேகமாக படக்குழு மற்றும் கேமிராவை கொண்டு வந்துள்ளார். அதை பார்த்ததும் ரஜினி அதிர்ச்சியாகிவிட்டார். மாலை நேரத்தில் என்ன படப்பிடிப்பு என குழப்பமாக பார்த்துள்ளார்.

உடனே சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை அழைத்து அவருக்கு வயதான கெட்டப்பில் மேக்கப் செய்து ஒரு கோர்ட்டையும் போட்டு விட்டாராம். பிறகு அங்கு சுற்றி பார்க்க வந்த ஒருவரிடம் கார் ஒன்றை வாங்கி வந்தாராம். அதிலிருந்து ரஜினியை இறங்கி வர சொல்லி படம் பிடித்துள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினிக்கு ஒன்றுமே புரியவில்லை. எடுக்க வந்த ஷூட்டிங் காட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் வேறு ஏதோ சீனில் நடிக்க சொல்கிறாரே? என குழப்பமாக பார்த்துள்ளார் ரஜினி.

பிறகு படம் வெளியாகும்போது அந்த காட்சியை வயதான ரஜினி காட்சியின் போது பயன்படுத்தியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. அதனை பார்த்த ரஜினி அவரை பாராட்டினார்.

Refresh