லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படம் எடுத்தது முதலே அவர் எடுக்கும் திரைப்படங்களின் மீது தனிப்பட்ட வரவேற்பு என்பது உருவாக துவங்கியது. அந்த வகையில் ஒவ்வொரு பெரிய நடிகரை வைத்தும் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்பான ஹிட் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
அந்த வகையில் தமிழின் மிகப்பெரும் கமர்சியல் நடிகரான ரஜினிகாந்தை வைத்து கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜின் காம்போ எப்படியும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கூலி திரைப்படத்தின் முதல் 45 நிமிட காட்சிகளை சந்திப் கிஷன் பார்த்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறிய விமர்சனம் அதிக பிரபலம் ஆகி வருகிறது. கூலி திரைப்படத்தை பார்த்த சந்தீப் கிஷன் இந்த படம் தமிழ் சினிமாவில் வந்த படங்களிலே சிறப்பான படமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூல் பெற்று கொடுக்கும் என்று கூறி இருக்கிறார் சந்திப் கிஷன்.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் ஆயிரம் கோடி ரூபாய் ஹிட் கொடுக்கவே இல்லை. ஒரு வேளை அதைப்போலவே கூலி ஹிட் கொடுக்கும் பட்சத்தில் தமிழில் முதலில் ஆயிரம் கோடி வசூல் செய்து கொடுத்த நடிகராக ரஜினிகாந்த் இருப்பார்.