Saturday, August 29, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajinikanth neighbour

rajinikanth neighbour

உங்க தலைவரு வீட்டுக்குள்ள போங்க!.. ரஜினிக்காக கூடிய கூட்டத்தை வெளுத்து வாங்கிய பெண்!..

by Raj
January 16, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Rajinikanth Pongal : தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகப்பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது.

இதனால் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பது அவர்களுக்கு பெரும் வரம் என கருதுகின்றனர். பொதுவாக ரசிகர்கள் என்றாலே அவர்களது நடிகர்களை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும். ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

இதனால்தான் ராகவா லாரன்ஸ் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தங்களது ரசிகர்கள் எங்கே சந்தித்தாலும் அவர்களுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் அப்படியான விஷயத்தை ரஜினிகாந்த் எப்போதுமே செய்தது இல்லை.

rajinikanth
rajinikanth

ரஜினிகாந்தின் பிறந்த நாளின் பொழுதும் மற்ற விழாக்களின் போதும் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு ஒரு பெரும் கூட்டம் அவரது வீட்டு வாசலில் வந்து நிற்கும். அப்பொழுது ரஜினிகாந்த் மாடியில் மேல் நின்று அவர்களுக்கெல்லாம் கையசைத்து விட்டு வீட்டுக்குள் செல்வாரே தவிர ஒருமுறை கூட அவர்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டது கிடையாது.

இந்த நிலையில் இதனால் ரஜினிகாந்தின் வீட்டிற்கு அருகாமையில் இருப்பவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நேற்று பொங்கலை முன்னிட்டு இதேபோல ரஜினிகாந்த்தை சந்திக்க ஒரு பெரும் கூட்டம் வந்து நின்ற பொழுது பக்கத்து வீட்டில் இருந்த பெண் இதனால் மிகவும் கடுப்பாகிவிட்டார்.

ரஜினி பிறந்தநாள், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என அடிக்கடி போயஸ் கார்டன் வந்து கோஷம் போடும் ரசிகர்கள். பக்கத்துவீட்டு பெண்மணி ஆவேசம்.

ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல்.. இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு… pic.twitter.com/RX7TLWm8Hg

— Blue Sattai Maran (@tamiltalkies) January 15, 2024

அவர் இது குறித்து பேசும் பொழுது உங்கள் ரஜினிகாந்தை வீட்டிற்குள் அழைத்து உங்களிடம் பேச சொல்லுங்கள் பேச மாட்டார். அவருக்காக போய் இப்படி எல்லாம் நின்று கொண்டிருக்கிறீர்களே ஒரு நல்ல நாளில் நாங்கள் பூஜை செய்து சாமி கும்பிட முடிகிறதா வெளியில் நின்று இப்படி கத்தி கொண்டிருந்தால் நாங்கள் எப்படி விழாவை கொண்டாட முடியும் என்று பேசியிருக்கிறார் அந்தப் பெண் இதனை அடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags: pongalrajinikanthtamil cinemaதமிழ் சினிமாபொங்கல்ரஜினிகாந்த்
Previous Post

முதல் படத்தின்போது தயாரிப்பாளர் என்னை அவமானப்படுத்தினாலும், ஒரு விஷயத்தில் சந்தோஷமா இருந்துச்சு!.. உண்மையை கூறிய இயக்குனர் சரண்.

Next Post

6 பக்க டயலாக்கை அரை மணி நேரத்தில் நடிச்சேன்!.. மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா!.

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
SJ Suriya

6 பக்க டயலாக்கை அரை மணி நேரத்தில் நடிச்சேன்!.. மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா!.

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved