Connect with us

6 பக்க டயலாக்கை அரை மணி நேரத்தில் நடிச்சேன்!.. மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா!.

SJ Suriya

Cinema History

6 பக்க டயலாக்கை அரை மணி நேரத்தில் நடிச்சேன்!.. மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா!.

Social Media Bar

SJ Suriya : ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த எஸ்.ஜே சூர்யாவிற்கு ஆசை திரைப்படம் மூலமாக அஜித்திடம் பழக்கம் கிடைத்தது.

அப்பொழுது எஸ்.ஜே சூர்யா வின் இயக்குனர் திறமையை பார்த்த அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா தனது முதல் திரைப்படமான வாலி திரைப்படத்தை இயக்கினார். வாலி திரைப்படத்தைப் பொறுத்தவரை அதில் அஜித்தை வில்லனாகவும் நடிக்க வைத்திருந்தார்.

இதற்கு முன்பு அஜித்தை வில்லனாக யாரும் நடிக்க வைக்கவில்லை என்பதால் இந்த திரைப்படம் வெற்றி அடையுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இருந்தாலும் படம் வெளியான பிறகு எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து குஷி என்கிற திரைப்படத்தை இயக்கினார். குஷி திரைப்படமும் எதிர்பார்த்ததைவிட பெரும் வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு எஸ்.ஜே சூர்யா  இயக்கும் திரைப்படங்களில் அவரே நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் வந்து எஸ்.ஜே சூர்யா நடிகராக மாறினார் சில காலங்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த எஸ் ஜே சூர்யா விற்கு இறைவி திரைப்படம் ஒரு தொடக்கமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் மீது மதிப்பு கொண்ட எஸ் ஜே சூர்யா தொடர்ந்து அவருடன் சேர்ந்த  சேர்ந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை குறித்து அவர் பேட்டியில் வரும் பொழுது அதற்கு முன்பு நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஆறு பார்க்க வசனம் ஒன்று எஸ் ஜே சூர்யா பேச வேண்டி இருந்ததாம். அந்த படப்பிடிப்பை ஒரு நாள் முழுக்க எடுக்க திட்டம்பட்டி இருந்தனர்.

ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த படபிடிப்பு மாலை 4 மணிக்குதான் துவங்கியது இருந்தாலும் தளராத எஸ் ஜே சூர்யா இயக்குனரிடம் கூறி அந்த ஆறு பக்கவாசனத்தை அரை மணி நேரத்தில் பேசி இருக்கிறார் இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியும் இருக்கிறார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top