14 லட்சத்தில் இருந்து 1 கோடி.. ரஜினியின் தலை எழுத்தை மாற்றிய தயாரிப்பாளர்.. இந்த விஷயம் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் இருந்து எந்த ஒரு பெரிய சர்ச்சையிலும் சிக்காத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மற்ற நடிகர்களை போல மேடையில் பேசும்போது கூட எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களையும் ரஜினிகாந்த் பேசுவது கிடையாது.
மிகவும் அடக்கமான ஒரு நடிகராக தான் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். அதே போல இவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்ற பிறகும் கூட இயக்குனர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பதை ரஜினிகாந்த் ஒரு பானியாக வைத்திருக்கிறார்.
அதே போல தனக்கு உதவி செய்தவர்களுக்கு சினிமாவில் திரும்பவும் உதவி செய்ய ரஜினிகாந்த் தயங்கியதே இல்லை என கூறலாம். இப்படியாக பஞ்சு அருணாச்சலத்துடன் அவருக்கு நடந்த ஒரு நிகழ்வு முக்கியமானது.
பஞ்சு அருணாச்சலம் தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட துறைகளில் முக்கிய நபராக இருந்தவர். சொல்ல போனால் ரஜினிகாந்துக்கு குரு என்று அவரை கூறலாம்.
பஞ்சு அருணாச்சலம் மீது ரஜினிகாந்துக்கு அதிகம் மரியாதை உண்டு. பஞ்சு அருணாச்சலம் பிரியா என்கிற திரைப்படத்தை தயாரித்த பொழுது அதில் நடிப்பதற்கு ரஜினிகாந்திடம் கேட்டார். அப்பொழுது அதற்கு ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த் வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றதும் மிகுந்த ஆசையாக அந்த படத்தில் நடிக்க வந்திருந்தார்.
அப்பொழுது உன்னுடைய சம்பளம் என்ன என்று பஞ்சு அருணாச்சலம் கேட்டார் அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் வெளிநாடு எல்லாம் செல்கிறீர்கள் என்றால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும்.
எனக்கு ஒரு 14 லட்சம் சம்பளமாக கொடுங்கள் போதும் என்று கூறினார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பஞ்சு அருணாச்சலம் உன்னுடைய மார்க்கெட் என்னவென்று தெரியாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறாய் என்று கூறிவிட்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தார்.
ரஜினிகாந்த் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடித்த திரைப்படம் பிரியா திரைப்படம் தான்.