News
திடீர் உடல் நல குறைவால் அவதி? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்.!
தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். எப்போதுமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து கலெக்ஷனை கொடுத்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அதனால்தான் இவ்வளவு வயதான பிறகும் கூட ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது குறையவில்லை.
இருந்தாலும் அவரின் வயது காரணமாக அவருக்கு வைக்கப்படும் காட்சிகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகள், சண்டை காட்சிகள், நடனமாடும் காட்சிகள் என்பதெல்லாம் இல்லாமல் இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.
உடல் நலக்குறைவு:
ஒருவேளை ரஜினிகாந்த் நடனம் ஆடுவது மாதிரியான காட்சிகள் இருந்தாலும் ஒரு சின்ன வகையிலான உடலை வருத்தாத நடனத்தை மட்டுமே அவருக்கு கொடுக்கின்றனர். இப்படியெல்லாம் இருந்துமே கூட வயது மூப்பு காரணமாக தொடர்ந்து சினிமாவில் சேவை செய்வது ரஜினிக்கு கடினமான விஷயமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்சமயம் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த். வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பை அடுத்து தொடர்ந்து ஜெயிலர் 2 மற்றும் கூலி இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டிருந்தார் ரஜினிகாந்த்.
ஆனால் சமீபத்தில் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதாகவும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எப்படியும் சில நாட்கள் இதனால் அவர் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது நல்லது என்கின்றனர் ரஜினிகாந்தின் ரசிகர்கள்.
