Connect with us

ரஜினிகாந்திற்கு வாய்ப்பை பெற்று கொடுத்த அந்த ஒரு கேள்வி!.. அன்னிக்கு அது நடக்கலைனா இன்னிக்கி ரஜினி இல்ல!..

rajinikanth

Cinema History

ரஜினிகாந்திற்கு வாய்ப்பை பெற்று கொடுத்த அந்த ஒரு கேள்வி!.. அன்னிக்கு அது நடக்கலைனா இன்னிக்கி ரஜினி இல்ல!..

Rajinikanth: இப்போது திரை துறையிலேயே மிகப்பெரும் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது ரஜினிகாந்திற்கு பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்புதான்.

கே.பாலச்சந்தர் தான் ரஜினியின் குரு என்று கூறலாம் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார் அப்போதுதான் அவருக்கு திரைப்பட பள்ளியில் படித்திருந்தால் தான்  நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே தெரிந்தது.

இதனை தொடர்ந்து ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்தார் ரஜினிகாந்த். முதலில் கன்னட பயிற்சி பள்ளியில்தான் ரஜினி நடிப்பு கற்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த பாலச்சந்தர் தமிழ் மற்றும் கன்னட நடிகர்களுக்கு சேர்த்து வைத்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

rajinikanth
rajinikanth

அப்போதே பாலச்சந்தரின் பல படங்களை ரஜினிகாந்த் பார்த்து இருந்ததால் கே.பாலச்சந்தர் மீது அவருக்கு அதிக மரியாதை இருந்து வந்தது. அப்போது ஒவ்வொரு மாணவனும் கே.பாலச்சந்திரிடம் ஒவ்வொரு கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ரஜினிகாந்த் பாலச்சந்திரிடம் கேட்கும் பொழுது நடிப்பை தவிர ஒரு நடிகருக்கு வேறு என்ன இருக்க வேண்டும் என்று கேட்டார். அந்த கேள்வியே ஒரு ஆழமான கேள்வியாக கே.பாலச்சந்தருக்குப் பட்டது அதற்கு பதில் அளித்த பாலச்சந்தர் ஒரு நடிகன் திரையில் மட்டுமே நடிப்பவனாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் ரஜினியின் மீது அவருக்கு ஒரு தனி ஈடுபாடு வந்தது பிறகு ரஜினியை அழைத்து உனக்கு தமிழ் பேச தெரியுமா என்று கேட்டு இருக்கிறார் பாலச்சந்தர். கொஞ்சம் கொஞ்சம் பேச தெரியும் என ரஜினி கூறவும் நீ முதலில் தமிழில் பேச கற்றுக்கொள் நானே உனக்கு வாய்ப்பு தருகிறேன் நீ ஒரு நல்ல நிலைக்கு வருவாய் என்று உபதேசம் கொடுத்திருக்கிறார் பாலச்சந்தர். அதன் பிறகு தான் பாலச்சந்தர் படங்களில் ரஜினிக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

manimegalai vj vishal
vijay sethupathi jeffery
raveendar 2
jeffery
To Top