Tamil Cinema News
விஜய் மாநாடு குறித்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. சூப்பர் ஸ்டார் அதை கவனிக்கல போல..!
விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வாக நடந்த மாநாடு தற்சமயம் அதிக பேச்சுக்களை எழுப்ப துவங்கி இருக்கின்றன. பொதுவாகவே விஜய் இசை வெளியீட்டு விழாக்களிலும் சரி மற்ற நிகழ்ச்சிகளிலும் சரி மிக அமைதியாக பேசக்கூடியவர்.
2000 கால கட்டங்களில் அவர் டிவி நிகழ்ச்சிகளில் பேசும்பொழுது பார்த்தால் மிகவும் சாந்தமாக பேசுவார் விஜய். அப்படிப்பட்ட விஜய் தற்சமயம் த.வெ.க கட்சியின் மாநாட்டில் பேசிய விதம் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
விஜய் மாநாடு குறித்து ரஜினிகாந்த்:
திரை பிரபலங்கள் பலருமே இது குறித்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர் ராதிகா மாதிரியான சில திரை பிரபலங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு இது குறித்து கூறி இருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேட்கப்பட்டது ஏனெனில் நடிகர் ரஜினிகாந்த் வெகு காலங்களாகவே அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு இறுதிவரை வராமல் இருந்து விட்டார்.
ஆனால் விஜய் அரசியல் வருவதாக அறிவித்த ஒரு சில காலங்களிலேயே கட்சித் துவங்கி அதற்கான மாநாட்டையும் நடத்திவிட்டார். அது குறித்து ரஜினி கூறும் பொழுது விஜய்யின் இந்த மாநாடு நல்ல முறையில் வெற்றி பெற்றுள்ளது.
அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் ஆனால் ரஜினியை கேலி செய்யும் வகையிலும் விஜய் அந்த மாநாட்டில் பேசியிருந்ததாக ஒரு பேச்சு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது எப்படி ரஜினி விஜய்க்கு ஆதரவாக இப்படி பேசி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.