Latest News
சிவாஜி கணேசன் படத்தோட காபிதான் அந்த ரஜினி படம்!.. ஓப்பன் டாக் கொடுத்த ரமேஷ் கண்ணா!..
Rajinikanth : ரஜினிகாந்த் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் மெஹா ஹிட் படங்களாக அமைவதால் அவரது திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் மதிப்பு இருந்து வருகிறது.
ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதே நிலையில் அடுத்த படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ரஜினிகாந்த்.
அதே போல இயக்குனர் நெல்சனுக்கும் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எனவே இருவரும் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தை உருவாக்கினர். ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா கூறும்போது ஜெயிலர் படம் தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட சிவாஜி நடித்த தங்கபதக்கம் படத்தின் காபிதான். தங்கபதக்கம் போலவே இதிலும் தனது மகன் பாதை தவறியதால் தந்தையே அவரை கொல்கிறார். ஆனால் உணர்வு ரீதியாக தங்கபதக்கம் திரைப்படத்தில் இருந்த கனெக்ட் இந்த படத்தில் இல்லை.
படம் முழுக்க ரஜினிகாந்த் பலரையும் கொன்று கொண்டே இருந்தார். அப்படியே தனது மகனையும் கொன்றுவிட்டார் என்று கூறியிருந்தார் ரமேஷ் கண்ணா.