News
கல்யாணமாகி ஏழே மாசத்தில் குழந்தை? – சோஷியல் மீடியாவை அதிர விட்ட ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர். பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை அங்கு ஒரு குடும்ப அரசியல் உண்டு என கூறப்படுவதுண்டு. அதாவது குறிப்பிட்ட சில குடும்பங்கள்தான் மொத்த பாலிவுட்டையும் கைக்குள் வைத்துள்ளதாம்.

அப்படி குறிப்பிடப்படும் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள்தான் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். தாத்தா, அப்பா,மகன் என தலைமுறை தலைமுறையாக பாலிவுட்டில் இருக்கும் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக இருப்பவர் ரன் பீர் கபூர். அதே போல பாலிவுட்டின் பெரும் தயாரிப்பாளர், இயக்குனரின் மகள் ஆலியா பட்.
இருவரும் செல்வாக்கான குடும்பம் என்பதால் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். கடந்த ஏப்ரல் 14 அன்று இவர்களது திருமணம் நடந்தது. இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருந்தார்.
ஏப்ரலில் திருமணம் என்றால் எப்படியும் ஜனவரியில்தான் குழந்தை பிறக்க வேண்டும். ஆனால் நேற்று ஆலியா தனது டிவிட்டர் பக்கத்தில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என பதிவிடவும் சமூக வலைத்தளங்களில் இது ட்ரெண்டானது.

திருமணத்திற்கு முன்பு இருவரும் காதலித்து வந்த போதே ஆலியா கர்ப்பமாகியுள்ளார். எனவேதான் வேக வேகமாக இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர் என கூறப்படுகிறது.
