ரிஷப் ஷெட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த நெட்டிசன்கள்.. அவர் கொடுத்த பதிலடி..!

வட்டார தெய்வங்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் காந்தாரா. ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் ஒன் என்கிற திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த திரைப்படம் தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாக இருக்கிறது.

Social Media Bar

இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இதற்கு கலவையான விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் காந்தாரா திரைப்படத்தை பார்க்க போக வேண்டும் என்றால் சைவம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் கருத்தை பரப்பி விட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி உணவு என்பது அவர் அவர் தனிப்பட்ட உரிமை நாங்கள் எந்த காலத்திலும் அதற்கு எதிராக எதுவும் கூறியது கிடையாது. படக் குழுவில் இருந்து இந்த மாதிரி எந்த ஒரு விதிமுறையும் கூறப்படவில்லை என்று பதில் அளித்து இருக்கிறார்.