ராஜமெளலியின் பிரமாண்டத்தை கைப்பற்றிய ஜீ 5 ! – ஆர்.ஆர்.ஆர் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது..?

2022 ஆம் ஆண்டு துவங்கியது முதல் தமிழில் பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து வருகின்றன. கொரோனா காலத்தில் ரிலீஸ் ஆகாமல் இருந்த படங்கள் யாவும் இப்போது வெளியானதால் ரசிகர்களுக்கு மாதம் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வந்துவிடுகிறது.


அப்படி இந்த வருடம் இயக்குனர்மெளலியின் பிரமாண்டத்தில் உருவாகி தியேட்டரில் 1000 கோடியை தாண்டி ஓடிய திரைப்படம்தான் ஆர்.ஆர்.ஆர்
தெலுங்கின் மிக முக்கிய நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராமசரண் மற்றும் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், அலியா பட் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்ததும் இந்த வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.


24 மார்ச் 2022 வெளியான ஆர் ஆர் ஆர் தற்சமயம் ஒரு மாதத்தை கடந்து ஓடி கொண்டிருக்கும் நிலையில் அதன் ஓ.டி.டி உரிமத்தை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது.
வரும் மே 20 அன்று ஓ.டி.டியில் ஆர்.ஆர்.ஆர் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல்கள் வந்துள்ளன.

Refresh