News
கேஜிஎஃப்ல இதெல்லாம் லாஜிக் இல்லாததுதான்..! – எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து!
கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து வெளியான படம் கேஜிஎஃப் அத்தியாயம் 2.

2018ல் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானதிலிருந்தே இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது.
படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்து விட்ட போதிலும் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் கேஜிஎஃப் 2, இதுவரை உலக அளவில் ரூ.1000 கோடியை தாண்டி கலெக்சனை அள்ளியுள்ளது.
தமிழில் கேஜிஎஃப் 2 வெளியான அதே சமயம் விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியான நிலையில் பீஸ்ட்டை விட கேஜிஎஃப் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் கேஜிஎஃப் 2 பற்றி சமீபத்தில் பேசிய விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் “சமீபத்தில்தான் கேஜிஎஃப் 2 பார்த்தேன். படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். நாடாளுமன்றத்திற்குள் இப்படி சர்வ சாதாரணமாக யாராவது துப்பாக்கியை ஏந்திக் கொண்டு செல்ல முடியுமா? ஆனால் அதை நம்ப வைத்ததுதான் இயக்குனரின் மேஜிக்” என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.
