Connect with us

மதுரைக்கே போக இருந்த விஜயகாந்த் வாழ்க்கையை தூக்கி நிறுத்துனது நான்தான்!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ சந்திரசேகர்!.

vijayakanth SA chandrasekar

Cinema History

மதுரைக்கே போக இருந்த விஜயகாந்த் வாழ்க்கையை தூக்கி நிறுத்துனது நான்தான்!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ சந்திரசேகர்!.

cinepettai.com cinepettai.com

SA chandrasekar  and Vijayakanth :  தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். முதலில் குடும்ப நாயகனாக நடித்து வந்த விஜயகாந்த் ஊமை விழிகள் திரைப்படத்தை தொடர்ந்து போலீஸ் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கினார்.

அந்த திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு கிடைத்தது அப்படி அவர் நடித்த நிறைய க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் அதிகபட்சம் புது இயக்குனர்களால் எடுக்கப்பட்டதுதான். அவர்கள் தங்களது முதல் படம் என்பதால் முழு முயற்சியுடன் அந்த திரைப்படங்களை எடுத்து இருந்தன.

இப்படியாக தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகருக்கு அதிகமான வாய்ப்பு கொடுத்தவரும் விஜயகாந்த்தான் உதவி இயக்குனராக இருந்து இயக்குனர் ஆவதற்காக மிகவும் முயற்சி செய்து வந்த எஸ்.ஏ சந்திரசேகருக்கு 1978 இல் பட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவள் ஒரு பச்சை குழந்தை என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

Sattam_Oru_Iruttarai
Sattam_Oru_Iruttarai

அந்த திரைப்படம் படுதோல்வி கண்டது அதே போல விஜயகாந்தும் அப்போதுதான் அறிமுக நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருந்தார். எனவே எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்தை சந்திந்து வாய்ப்பு கேட்டார். விஜயகாந்த் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவே அப்போது சந்திரசேகர் இயக்கிய திரைப்படம் தான் சட்டம் ஒரு இருட்டறை.

அந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. மேலும் இந்தி தெலுங்கு கன்னடம் என்று பழமொழிகளில் அந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் எஸ்.ஏ சந்திரசேகர் குறித்து கூறும் பொழுது இன்னொரு தகவல் ஒன்றை கூறியிருந்தார்.

அதாவது சட்டம் ஒரு இருட்டறை எடுக்கும் சமயத்தில் விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் மதுரைக்கு செல்வதற்கு இருந்தார் அப்பொழுது அவரை ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக ஆக்குகிறேன் என்று வாக்கு கொடுத்து அவரை வைத்து சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை இயக்கினேன் என்று கூறியிருக்கிறார்.

உண்மையில் விஜயகாந்திற்கும் அதற்கு முன்பு அந்த அளவிற்கு ஹிட் படங்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம். அதே போல சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக விஜயகாந்த் வலம் வருவதற்கு இந்த படமே ஒரு ஆரம்பமாக அமைந்தது.

To Top