விஜய் மேல தப்பில்ல.. நெல்சன்தான் காரணம்..! – எஸ்.ஏ.சி பகீர் குற்றச்சாட்டு!

SAC

விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

SAC
S.A.Chandrasekar

விஜய் நடித்து நெல்சன் இயக்கி வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் கடந்த 13ம் தேதி வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவு கலெக்சனை பெறவில்லை. மேலும் படத்தின் மீது எதிர் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையின் படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் “சில இளம் இயக்குனர்களுக்கு ஆரம்பமே சில படங்கள் நன்றாக ஓடிவிட்டால் பெரிய ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது”

“ஆனால் அவர்கள் என்ன இயக்கினாலும் நடிகராலேயே படம் ஓடிவிடும் என அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள். பீஸ்ட் படத்தோல்விக்கு அதன் திரைக்கதை சரியாக இல்லாததே காரணம்” என பேசியுள்ளார்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh