News
ஓடி போய் கட்டிப்புடிச்சிட்டேன் – சிவகார்த்திகேயன் குறித்து மனம் நெகிழ்ந்த சத்யராஜ்
வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஒரு முக்கிய கதாநாயகனாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இறுதியாக நடித்த டாக்டர் மற்றும் டான் இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது.

இதனால் சிவகார்த்திகேயனின் சம்பளம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்பட்சம் குழந்தைகளை கவரும் கதைகளின் மேல் ஈடுபாடு செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கும் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது.
வருகிற தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. பிரின்ஸ் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது.
அதில் நடிகர் சத்யராஜ் சிவகார்த்திகேயன் குறித்து கூறும்போது படத்தின் இறுதி காட்சிகளில் ஒரு வசனம் இருந்தது. அது மிகவும் நீளமான வசனமாகும். அந்த வசனத்தை மிக சுலபமாக சிவகார்த்திகேயன் பேசினார். அதை பார்த்து நான் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்தேன். என கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.
