சினிமாவில் வாய்ப்பே இல்லை! விரக்தியில் இருந்த சத்யராஜ்க்கு உதவிய விஜயகாந்த்.
விஜய்காந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் சினிமா துறையில் வாய்ப்பு தேடிய காலம் முதலே நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்துதான் சினிமாவில் ஒவ்வொரு ஸ்டுடியோ படிகளாக ஏறி இறங்கி வாய்ப்புகளை தேடி வந்தனர்.
அப்போது சத்யராஜ்க்கு விஜயகாந்திற்கு முன்பாகவே திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. சத்யராஜ் வாய்ப்பை பெற்ற ஒரு வருடத்தில் விஜயகாந்திற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. விஜயகாந்திற்கு எடுத்த உடனே ஹீரோ கதாபாத்திரம் கிடைத்ததால் அவர் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார்.
ஆனால் சத்யராஜுக்கு முதலில் வில்லன் கதாபாத்திரம்தான் கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருந்தார். சில காலங்களுக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பே கிடைக்காமல் போயிற்று.
இந்த நிலையில் விஜயகாந்தை சந்தித்த சத்யராஜ், “நான் கதாநாயகனாக எல்லாம் நடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். எனக்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லை. அதுனால படம் இயக்கலாம்னு இருக்கேன். நான் படம் எடுத்தா என் படத்தில் நீ ஹீரோவாக நடிப்பியா?” என சத்யராஜ் கேட்க
என்னப்பா இப்படி கேட்டுட்ட! எப்ப எடுக்குறன்னு சொல்லு, நடிச்சி கொடுக்கிறேன் என கூறினார் விஜயகாந்த். ஆனால் அதற்கு பிறகு சத்யராஜ்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வரவே அவரும் பிரபலமாகிவிட்டார்.
இருந்தாலும் விரக்தியான நிலையிலும் கூட தனக்கு விஜயகாந்த் எவ்வளவு ஆறுதலாக இருந்தார் என்பதை அவர் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.